நெட்டிசன்:
வாசுகி பாஸ்கர் அவர்களின் முகநூல் பதிவு:
ஹிந்து பண்டிகைக்கு வாழ்த்து கூட சொல்வதில்லை, ஆனால் ரம்ஜானுக்கு கஞ்சி குடிக்கிறார் கலைஞர் என்று ஒரு விமர்சனம் உண்டு.
ஹிந்து மதத்தின் மீது சாப்ட் கார்னர் இருக்கும் திமுகவினருக்கே கூட இந்த விமர்சனம் உண்டு. கலைஞரின் நுட்பமான சமூக அரசியல் வெளிப்படும் இடம் இது தான்.
பார்ப்பன சம்பிரதாயத்தின் மேல் எழுப்பப்பட்ட ஹிந்து என்கிற மதத்தையோ அதை ஆராதிக்கும் மக்களையோ காக்க இங்கே கலைஞரோ, பெரியாரோ தேவையில்லை. பார்ப்பனியத்தை விமர்சனம் செய்தே கொள்கையை நிறுவி, இந்து என்றால் திருடன் என்று சொன்ன கலைஞர் வீட்டிலே கூட பார்ப்பன சம்பிரதாயங்கள் புகுந்து விட வல்லது என்பதை கலைஞர்அறிவார். அதை இனியும் ஒருவர் வாழ வைக்க வேண்டுமா என்ன?
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஹிந்து மதம் பலவகையான மலர்கள் கோர்க்கப்பட்ட நெடிய சங்கிலியை போல பிண்ணி பிணைந்து இருக்கிறது, அந்த சங்கிலியின் மேல் இருக்கும் மலர்களுக்கு மாநிலத்துக்கு ஒரு பெயர் இருந்தாலும், வர்ணாசிரம படி அந்த மலர்களின் பொது பெயர் “சூத்திர பூ”
இந்த பூக்கள் சங்கிலியின் மேல் பகுதியை காத்து கொண்டிருந்தாலும் அது காய்ந்து போக கூடியது தான், ஆனால் அதன் உள்ளே இருக்கும் “நூல்” ஒரு காலமும் அறுபடாதது, பாதுகாப்பானது.
உலகம் முழுக்க முற்போக்குவாதிகள் இருந்தாலும் இந்தியாவை பொறுத்தவரை மத எதிர்ப்பு என்கிற காரணத்தை வைத்து அனைவரையும் ஒரு மாதிரியாக அணுகுவது எத்தகைய முடிவை தரும் என்பதை கலைஞர் அறிவார். பார்ப்பன கட்டுமானத்தில் இருக்கும்வரை இந்து மதத்திற்குள்ளவே சமத்துவம் ஒரு போதும் சாத்தியமில்லாதது என்பதை விளங்கிக்கொண்ட பெரியாரின் தம்பி கலைஞர்.
இந்தியாவின் மொத்த சதவிகிதம் சிறுபான்மை, அதில் தமிழகத்தின் இஸ்லாமிய மக்கள் தொகை சிறுபான்மையில் சிறுபான்மை. இந்த வாக்கு அரசியலுக்காக தான் சிறுபான்மைக்கு ஆதரவாக கலைஞர் இருந்தார் என்று யாரவது சொன்னால் என்னால் சிரிக்க தான் முடியும். வாக்கரிசியலுக்காக கொள்கை சமரசங்கள் இங்கே அரங்கேறியது என்றாலும் ஒரு போதும் தமிழக இஸ்லாமிய மக்கள் வாக்குகளாக பார்க்கப்படவில்லை.
ஒரு தேசத்தின் / மாநிலத்தின் சிறுபான்மை மக்கள் எப்படி காக்கப்பட வேண்டும் என்பதற்கு இந்தியாவுக்கு மட்டுமில்லை, உலகத்துக்கே முன் உதாரணம் தமிழகம்.
அதை அரசியல் ரீதியாக சாத்தியப்படுத்தி காட்டிய சமத்துவ தலைவர் கலைஞர்.
பார்ப்பனீயம் என்கிற சிறுபான்மை சாதி இந்தியா முழுக்க கோலோச்சி இருப்பதும், இஸ்லாமியர்கள் என்கிற சிறுபான்மை மதம் இந்தியா முழுக்க உளவியல் சமூக, ஒடுக்குமுறைக்கு ஆளாவதும் என்கிற இந்த இரு எதிர் நிலைப்பாடுகள் கொண்ட இந்தியாவை அதன் யதார்த்த பிடியில் இருந்து நீங்கள் உணர்ந்தால் மட்டுமே, இஸ்லாமிய மக்கள் மீதான நம் சகோதரத்துவம் எவ்வளவு அத்தியாவசியமாக இருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.
இதற்கு முன், “கொழுக்கட்டை கசக்குது, கஞ்சி, பிரியாணி இனிக்குதா?” என்கிற counter கள் எல்லாம் கலைஞரை ஒருபோதும் பதம் பார்த்ததில்லை,