கருணாநிதியின் வயது.. ஸ்டாலின் தடுமாற்றம்… ஜெயலலிதா சிரிப்பு!

Must read

ஜெயலலிதா - ஸ்டாலின் - கருணாநிதி
ஜெயலலிதா – ஸ்டாலின் – கருணாநிதி

“சும்மா லோக்கல்லேயே சுத்திக்கிட்டிருக்கியே.. சட்டசபைக்கு போய்ட்டு வா”னு நேத்து காலையில சொன்னார் எடிட்டர்.

ஆகா…. பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் நேரடியா பார்க்கலாமேனு உடனே கிளம்பிட்டேன்.

 நேத்துதான், தமிழக சட்டப்பேரவையில சபாநாயகர், துணை சபாநாயகர் பதவி ஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது.

சபாநாயகரை இருக்கையில அமர வைக்கிற வாய்ப்பு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு கெடச்சுது.

அப்போ பேசுன ஸ்டாலின், “இன்னைக்குத்தான் என் தந்தையும்
தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் பிறந்த தினம்” அப்படின்னும் பேசி,  சட்டப்பேரவை பதிவுகள்ல அதை பதியச் செய்தாரு.  அப்போ ஸ்டாலின்,  “கருணாநிதியோட வயசு 93” அப்படினு சொல்றதுக்கு பதிலா “63” அப்படினு பேசிட்டாரு.

அவருக்கு நேர் எதிரில இருந்து  பேச்சைக் கேட்டுக்கிட்டிருந்த  முதல்வர் ஜெயலலிதாவுக்கு  கருணாநிதியின் வயசை மாத்திச் சொன்தும் சிரிப்பு தாங்கலை. சமீபமா இப்படி ஒரு சிரிப்பை ஜெயலலிதா சிரிச்சதே இல்லேனுதான் சொல்லணும். அப்படி ஒரு சிரிப்போ சிரிப்பு.

ஆனா ஸ்டாலினுக்கு தன்னோட தவறு தெரியல.. ஜெயலலிதா சிரிச்சதையும் கவனிக்கலை. அவரு பாட்டுக்கு பேசிட்டு வந்து தன்னோட சேர்ல உக்கார போனாரு.

ரவுண்ட்ஸ்பாய்
ரவுண்ட்ஸ்பாய்

பதறிப்போன தி.மு.க. எம்.எல்.ஏக்கள், ஸ்டாலினிடம் இந்த மேட்டரை சொல்ல…  ஸ்டாலினும் பதறிப்போனாரு. உடனே மறுபடி சபாநாயகருகிட்ட போயி,  அனுமதி வாங்கி,  தான் தப்பா குறிப்பிட்டிருந்த கருணாநிதியின் வயசை மாத்தி 93 அப்படினு ப திவு பண்ணிக்குகங்கனு கேட்டுக்கிட்டாரு.

அப்பவுமு ஜெயலலிதாவுக்கு சிரிப்போ சிரிப்பு.

“93 வயசிலேயும் தடுமாறாம அரசியல் பண்றாரு கருணாநிதி..!  அவரோட வயசை சொல்றதுல தடுமாறிட்டாரே ஸ்டாலின் –  அப்படினு நெனச்சிதான் அம்மா சிரிச்சிட்டாங்க” அப்படின்னு சட்டமன்ற மேல் மாடத்துல
உட்கார்ந்திருந்த சில அ.தி.மு.க. வி.ஐ.பிங்க போட்டாங்களே, ஒரு போடு!

– ரவுண்ட்ஸ்பாய் 

More articles

Latest article