டில்லி:

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகி உள்ள நிலையில்  அவர்  மீதான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடப்பட்டு உள்ளது.

கார்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக  சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் தமிழகத்தில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளு மன்ற உறுப்பினராக உள்ளதால்,எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில், கார்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.