சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னை, விழுப்புரம், நெல்லையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பிரசித்தி பெற்ற கார்த்தி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான “டிசம்பர் 3ல் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அண்ணாமலையார் கோவில் தங்கக் கொடிமரம் முன்பு எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆட 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் .
பிரசித்தி பெற்ற இந்த நிகழ்வை நேரடியாக வந்தது தரிசித்து, இறைவனின் ஆசி பெறுவது இந்துக்களின் நம்பிக்கை, திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் கலந்துகொள்வது கோடி புண்ணியத்திற்குச் சமம் . அதனால், அன்றைய தினம் ஏராளமான மக்கள் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருகை புரிவார்கள்.
இதையொடிடி, திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் குறைக்கவும் தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல், தாம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் இருந்து இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன் விவரம் ருமாறு:
1. சென்னை சென்ட்ரல் – திருவண்ணாமலை:
டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். காலை 9.15 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியாகத் திருவண்ணாமலை செல்லும். பின்னர் அங்கிருந்து விழுப்புரம், செங்கல்பட்டு வழியாகச் சுற்றி வந்து அன்று இரவு 7 மணிக்குச் சென்னை கடற்கரை (Chennai Beach) நிலையத்தை வந்தடையும்.
2. தாம்பரம் – திருவண்ணாமலை (முன்பதிவில்லா சிறப்பு ரயில்):
டிசம்பர் 3 மற்றும் 4 காலை 9.15 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்படும். அதே நாளில் மாலை 5 மணிக்குத் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, இரவு 9 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.
3. விழுப்புரம் – திருவண்ணாமலை (முன்பதிவில்லா சிறப்பு ரயில்):
நவம்பர் 30, டிசம்பர் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும். அதே தேதிகளில் மதியம் 12.40 மணிக்குத் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
4. விழுப்புரம் – வேலூர் கண்டோன்மெண்ட் (முன்பதிவில்லா சிறப்பு ரயில்):
டிசம்பர் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரவு 10.40 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும். டிசம்பர் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்டிலிருந்து புறப்பட்டு, காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
5. நெல்லை – திருவண்ணாமலை சிறப்பு ரயில்:
டிசம்பர் 3-ம் தேதி இரவு 9.30 மணிக்குத் திருநெல்வேலியிலிருந்து புறப்படும். மறுநாள் (டிசம்பர் 4) காலை 8.30 மணிக்குத் திருவண்ணாமலை சென்றடையும். டிசம்பர் 4-ம் தேதி இரவு 7.55 மணிக்குத் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
கார்த்திகை தீபத் திருவிழாவிற்குச் செல்லும் பக்தர்கள் இந்தச் சிறப்பு ரயில் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டு உள்ளது.
தொடங்கியது தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…