2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார் சிங், வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதனை பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக கார்த்தி கூறியிருப்பதாவது :-
8 வருடங்கள் கழித்து ஒரு வழியாக நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது. பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என யோசிக்கிறேன். ஏற்கெனவே ஒரு வருடம் முடிந்துவிட்டது. அதிலிருந்து நாம் கற்ற பாடங்களை மறக்க மாட்டோம் என நம்புகிறேன். எப்போதும் பாதுகாப்பாக இருங்கள்