டெல்லி

த்திய ஜல்சக்தி துறை எனப்படும் நீர்வளத்துறையில் இணை அமைச்சராக கர்நாடகாவை சேர்ந்த சோமண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பங்கீடு குறித்த பிர்ச்சினை தொடர்ந்து வருகிறது.  இதை தீர்க்க மத்திய ஜல்சக்தி துறை எனப்படும் நீர்வளத்துறை ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளது.

ஆயினும் கர்நாடக மாநிலம் அந்தக் குழுவின் பரிந்துரைகளை சரிவர பின்பற்றுவது இல்லை. இது தமிழக மக்களுக்கு தீராத பிரச்சினையாக உள்ளது.  எனவே தமிழக அதிகாரிகள் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துக்கு புகார்கள் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் மட்திய ஜல்சக்தி துறை இணையமைச்சராக வி  சோமண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பிரச்சினை தொடரும் நிலையில் இந்த பிரச்சினையை கையாளும் துறைக்கு கர்நாடகாவை சேர்ந்த சோமண்ணா இணையமச்சராக நியமனம் செய்யப்பட்டது கடும் விமர்சந்த்துக்குள்ளாகி இருக்கிறது.