பெங்களூருர்:
கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா, முடிவுக்கு கொண்டு வருவதா என்பது குறித்து ஏப்ரல் 13ந்தேதிக்குள் முடிவு செய்யப்படும் என மாநில அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் மத்திய அரசு பரிந்துரைத்தால், மாநிலத்தில் ஊரடங்கு விலக்கப்படும் என்றும் மாநில கல்வி அமைச்சர் நாசூக்காக தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாகி வருவதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க பல மாநிலங்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. ஒடிசா மாநிலம் ஊரடங்கை வரும் 30ந்தேதி வரை நீட்டித்து அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ஏப்ரல் 13ந்தேதிக்குள் முடிவு செய்யப்படும் என்று மாநில அமைச்சர் சுதாகர் கே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக, கர்நாடக அரசு தற்போது மருத்துவ வல்லுநர்கள், மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்களின் பணிக்குழு தங்களது அறிக்கையை அரசிடம் நேற்று (புதன்கிழமை) சமர்ப்பித்து உள்ளது.
இதை ஆய்வு செய்த பின்னர் , ஊரடங்கை நீட்டிப்பதா, அல்லது முடிவுக்கு கொண்டு வருவதா என்பது இறுதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மத்திய அரசாங்கம் 21 நாள் தேசிய ஊரடங்கை முன்கூட்டியே அறிவித்து நடவடிக்கைகளை எடுத்தது. ” இன்னும் ஒரு வாரம் பார்ப்போம், “தனிமைப்படுத்தப்பட்ட முறைகள் மற்றும் சமூக தூரத்தை கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம் கொரோனா பரவலை நாம் கூட்டாக எதிர்த்துப் போராட வேண்டும், என்றார்.
ஊரடங்கு குறித்து, மத்திய அரசு ஒருவேளை “அந்தந்த மாநிலங்களின் நிலைமையின் அடிப்படையில் முடிவெடுக்க பரிந்துரைத்தால், ஊரடங்கை திரும்பப் பெற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு” என்றும் தெரிவித்தார்.
மாநில முதல்வர் எடியூரப்பா, மத்தியஅரசின் முடிவை பொறுத்தே ஊரடங்கு குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறி உள்ளார்.
மாநில அமைச்சரின் தகவலை பார்க்கும்போது, கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு வரும் 14ந்தேதியுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.