மங்களூர்,
கர்நாடகாவில் கம்பாலா போட்டி நடத்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கர்நாடக விவசாயிகள் மற்றும் மாணவர்கள் கம்பாலா எனப்படும் எருது போட்டி விளையாட அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியதை கண்ட அவர்களும் தமிழக மாணவர்கள் பாணியில் மங்களூருவில் போராட்டம் நடத்துகின்றனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கம்பாலா ( எருதுபந்தயம் ) நடத்த அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடந்து வருகிறது.
கம்பாலா எனப்படும் விளையாட்டானது, சேறும் சகதியும் கலந்த வயல்வெளியில் எருதுகளை பூட்டி வேகமாக ஓட்டி செல்ல வேண்டும். இதில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு பரிசுகள், பாராட்டு வழங்கப்படும். இது கர்நாடகாவில் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது.
பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியத்தினால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப் பட்டது போல் கம்பாலாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது 100 ஆண்டுகள் பழமையான கம்பாலா போட்டிக்கும் அனுமதி வழங்க கோரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
மங்களூரில் நடைபெற்று வரும் போராட்டத்தில், மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டுள்ள னர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றியதுபோல, கம்பாலாவுக்கும் அவசர சட்டம் இயற்ற தயாராக இருப்பதாக மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.