கொரடகரே

ர்நாடகா காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவின் தொகுதியில் முதல்வர் சித்தராமையா பிரசாரம் செய்கிறார்.

கடந்த 2013 ஆம் வருடத் தேர்த்லில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் சித்தராமையா முதல்வர் ஆனார் என்பது தெரிந்ததே.    ஆனால் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தேர்தலில் தோல்வி அடைந்ததும் ஒரு காரணம் என்பது பலருக்கு தெரியாத ஒரு விஷயம் ஆகும்.   காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என பலரும் கருதிய நேரத்தில் அவர் தேர்தலில் தோல்வி அடைந்ததால் சித்தராமையா முதல்வர் ஆனார்.

காங்கிரசின் தலைவர்கலில் ஒருவரான ரபிக் அகமது, “பரமேஸ்வராவுக்கு எதிராக பல காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர்.   நான் அவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை.  அவர் மற்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டதால் தனது சொந்த தொகுதியை கவனிக்க முடியவில்லை.   ஆனால் இம்முறை அவர் தனது தொகுதியில் முழுக்கவன செலுத்துவார் என நம்புகிறேன்” என தெரிவித்துல்ளார்.

இதற்கு பரமேஸ்வரா மறுத்துள்ளார்.  அவர், “எனது தோல்விக்கு எனது கட்சிக்காரர்கால் காரணம் அல்ல.  நான் எனது தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தேன்.   சென்ற தேர்தலில் மும்முனைப் போட்டி இருந்தது.   பாஜகவுக்கு எதிரான வாக்குகள் எனக்கு செல்வதற்கு பதில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு சென்று விட்டது.   அத்துடன் நான் எனது தொகுதியில் அதிகம் பிரசாரம் செய்யாததும் என் தோல்விக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது.   இம்முறை நான் எனது முழு கவனத்தையும் எனது தொகுதியில்  செலுத்தி வருகிறேன்.   எனவே நான் இம்முறை நிச்சயம் வெற்றி பெறுவேன்” எனக் கூறி உள்ளார்.

பரமேஸ்வராவுக்கு கட்சியில் எதிரி என சொல்லப்படும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தேர்தல்  பிரசாரத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.  அவர் பிரசாரக் கூட்டத்தில், “பரமேஸ்வராவுக்கு வாக்களிப்பது எனக்கு வாக்களிப்பது போல.  அதனால் நான் வெற்றி  பெற வேண்டும் எனில் பரமேஸ்வராவுக்கு வாக்களியுங்கள்” எனக் கூறியது இருவரிடையே மோதல்கள் இருந்ததாக கூறப்பட்டதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.