பெங்களூரு

ஜூலை 1ஆம் தேதி அன்று 4 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவரகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

கர்நாடகாவில் ஊரடங்கு காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ள்ளன. தற்போதைய ஊரடங்கில் பல விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பை பொறுத்து அந்தந்த மாநில அரசுகள் விதிகளை முடிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அவ்வகையில் கர்நாடக மாநில பள்ளிக் கல்விதுறை வரும் ஜுலை 1 ஆம் தேதி அன்று 4 ஆம் வகுப்பு வரை 7 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவரக்ளுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக ஜூலை 15 ஆம் தேதி அன்று 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை மற்றும் 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவரக்ளுக்கு பள்ளிகள் திறக்கபட்ட உள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது