பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 3ம் தேதி ராஜராஜேஸ்வரி நகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை அறிவித்தபடி இன்று நடைபெற்றது.
2 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே வெற்றி பெற்று இருக்கின்றனர். ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் முனிரத்னா 60.14 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவர் 57,672 வாக்குகள் பெற்றார்.
சிரா தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜேஷ் கௌடா 42.01 சதவிகித வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார். இவர் 61, 573 வாக்குகளை பெற்றார்.