கர்நாடகா: பாக். வெற்றியைக் கொண்டாடிய மூவர் கைது

வெற்றி பெற்ற பாக். அணி

லண்டனில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியை கொண்டாடிய மூவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மினி உலகக்கோப்பை என்று கூறப்படும் சாம்பியன் டிராபி தொடர் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இறுதிப்போட்டியில் இந்தியாவை வென்று கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றியது.

இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். ஆனால் கர்நாடக மாநிலம்  குடகு  மாவட்டத்தில் உள்ள சுண்டிகோபா பகுதியில் ரியாஸ், ஜாகீர், மற்றும் அப்துல் ஆகிய மூன்று இஸ்லாமிய இளைஞர்கள் பாகிஸ்தான் வெற்றியை வெடி வெடித்து கொண்டாடினர்.

இதையடுத்து இவர்கள் மீது உள்ளூர் பாஜக பிரமுகர் செங்கப்பா காவல்துறையில் புகார் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் மூன்று இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்தனர்.

 


English Summary
karnataka-police-arrest-3-men-celebrating-pakistan-s-victory-bjp-member-filed-complaint