பெங்களூரு: கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு வரும் 10ம்ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. அத்தியாவசிய தேவையான பால், காய்கறிகள், மளிகை பொருட்களை மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 45ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து, மாநிலத்தில் பொதுமுடக்கத்தை அறிவிப்பதாக மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கர்நாடக மாநிலஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10ம் தேதி தொடங்கி 2 வாரங்களுக்கு, அதாவது மே 25ந்தேதி முழு ஊரடங்கை அறிவிக்கப்படுகிறது.
ஊரடங்கானது காலை 10 மணி முதல்வ மாலை 6 மணிவரை நடைமுறையில் இருக்கும். இந்த காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள், சேவைகள் உள்ளடக்கிய வாகனங்கள் வழக்கம்போல் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது.
மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். சாலை செப்பணிடுதல் பணிகள் வழக்கம்போல் நடைபெறும். சரக்கு வாகனப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு கிடையாது.
கடைகள், பப், பார்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்கும். சினிமா தியேட்டர்கள், ஜிம் உள்ளிட்டவைக்கு அனுமதி கிடையாது.
மெட்ரோ ரயில் இயங்காது. வாடகை கார், ஆட்டோக்கள் அவசர மருத்துவத் தேவை பயன்பாட்டுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம் செல்லவும் பயன்படுத்த அனுமதி உண்டு.
ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை. பார்சல்களுக்கு அனுமதி உண்டு. ஆனால், தனிநபர்கள் பார்சல் வாங்க தங்களின் வாகனத்தை எடுத்துவர இயலாது. ஆனால், உணவகங்கள் தங்களின் வாகனங்கள் மூலம் ஹோம் டெலிவரி செய்யலாம்.
ஏற்கெனவே நிச்சயக்கப்பட்ட திருமணங்களை 50 பேருடன் நடத்தலாம். இறுதிச் சடங்கிற்கு 5 பேர் வரை அனுமதிக்கப்படுவர்.
பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. ஆனால், ஆன்லைன் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தலாம். வங்கிகள், ஏடிஎம் மையங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது.
ஐடி நிறுவனங்கள் வெகு குறைந்தளவிலான ஊழியர்களை மட்டும் நேரடியாக அலுவலகம் வரச்செய்துவிட்டு மற்றவர்களை வீட்டிலிருந்து பணி செய்யவைத்து இயங்கலாம்.
கட்டுமானப் பணிகளைப் பொறுத்தவரையில் பணியிடத்திலேயே ஊழியர்களை தங்கவைத்துக் கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.