பெங்களுரு:
கர்நாடகா முனிசிபல் கவுன்சில் பெருவாரியாக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
கர்நாடகா முனிசிபல் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
441 வார்டுகளுக்கு நடந்த வாக்கு பதிவில், பாஜகவை பின்னுக்கு தள்ளி 201 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
கர்நாடகா முனிசிபல் கவுன்சில் தேர்தல்: (441/441 வார்டுகள்)
▪️காங்கிரஸ்: 201
▪️பாஜக: 176
▪️ஜேடி(எஸ்): 21
▪️மற்றவை: 43
கர்நாடகா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள்: (1187/1187)
▪️காங்கிரஸ்: 508
▪️பாஜக: 437
▪️ஜேடி(எஸ்): 45
▪️மற்றவை: 197
கர்நாடகா டவுன் பஞ்சாயத்து தேர்தல்கள்: 577/577 வார்டுகள்
▪️காங்கிரஸ்: 236
▪️பாஜக: 194
▪️ஜேடி(எஸ்): 12
▪️மற்றவை: 135
நடந்து முடிந்த கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் பெருவாரியாக ஜெய்க்க வைத்த கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே. ஷிவகுமாருக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இம்மாபெரும் வெற்றி வரவிருக்கும் அம்மாநில சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என நம்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.