பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை திட்டமிட்டபடி நடத்தலாம் என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மைதானம் கார்ப்பரேஷனின் சொத்து என்பதால், அனைத்து மதத்தினரும் பயன்படுத்தலாம் என தெரிவித்து உள்ளது.
பெங்களூருவில் இருந்து சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அரசிடம் அனுமதி கோரி வழக்கு தொடரப் பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா நடத்த உள்ளாட்சி அமைப்பு செவ்வாய்கிழமை அனுமதி அளித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்பு வாரியம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. ஏற்கனவே இந்த மைதானம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த மைதானத்தின் 2.5 ஏக்கர் நிலத்தின் உரிமை குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்க வேண்டும் அஞ்சுமன்-இ-இஸ்லாம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுமீதான விசாரணை நேற்று இரவு விசாரிக்கப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து, பெங்களூரு இக்தா மைதானம் யாருக்கு சொந்தம் என்ற தீவிர பிரச்னை ஹூப்ளி வழக்கை பொறுத்தவரை எழவே இல்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இதற்கு பொறுந்தாது என நீதிபதி அசோக் எஸ். கினாகி தெரிவித்துள்ளார்.
மேலும், இது கார்ப்பரேஷனின் சொத்து. கார்ப்பரேஷன் தகுந்ததாகக் கருதும் அனைத்தையும் செய்ய முடியும். ரம்ஜான், பக்ரித் போன்றவற்றிலும் நிச்சயமாக தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதி தெரிவித்துள்ளார்.