பெங்களூரு: கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைக்கு  6 வாரம்  உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது பைக் டாச்சி ஓட்டுநரிடையை அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றம், மாநிலத்தில் உள்ள ரேபிடோ மற்றும் பிற பைக் டாக்ஸி சேவைகளை 6 வாரங்களுக்குள் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்ஸி நடவடிக்கைகளுக்குத் தேவையான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வகுக்க கர்நாடக அரசுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் கேவமாக வளர்ந்து வரும் தொழில்களில் பைக் டாக்சி சேவையும் ஒன்றாகும்.  அவசரத்துக்கு எங்காவது செல்ல வேண்டுமானால், ஆட்டோ, கார் போன்றவற்றை விட கட்டண குறைவாகவும், வாகன நெரிசலில் சிக்காமலும் செல்வதற்கும் பைக் டாக்சி சேவை  உறுதுணையாக உள்ளது. இதனால், இந்தை அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். இதனால், தற்போது பைக் டாக்சி சேவையில் பெண்களும் களமிறங்கி உள்ளனர். அதே வேளையில் இதன்மூலம் பல்வேறு புகார்களும் எழுந்துள்ளன. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சி சேவைக்கு அரசு தடை விதித்தது.

இதை எதிர்த்து,   ரேபிடோ, ஓலா, உபேர் போன்ற தனி​யார் பைக் டாக்ஸி நிறு​வனங்​களின் கூட்​டமைப்பு, கர்நாடகா உயர்​ நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்தது. இந்த மனுவை  விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற  நீதிபதி ஷியாம் பிர​சாத் விசாரித்து, ‘‘பைக் டாக்ஸி சேவைக்கு விதி​முறை​களை உரு​வாக்​கு​மாறு கர்​நாடக அரசுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதற்​காக 3 மாதங்​கள் கால‌ அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதுவரை பைக் டாக்ஸி சேவையை 6 வாரங்​களுக்கு கர்​நாட​கா​வில் நிறுத்த வேண்​டும். அதற்​குள் அரசு சட்ட திருத்​தத்தை மேற்​கொள்ள வேண்​டும்​’’என உத்​தரவிட்​டுள்ளது.

முன்னதாக,  ராபிடோவின் தாய் நிறுவனமான ரோப்பன் டிரான்ஸ்போர்ட்டேஷன் சர்வீசஸ் லிமிடெட், மலிவு மற்றும் விரைவான போக்குவரத்திற்கான தேவையைப் பயன்படுத்தி, 2016 ஆம் ஆண்டு வாக்கில் கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளை வழங்கத் தொடங்கியது. இருப்பினும், மாநில போக்குவரத்துத்துறை இந்த நடவடிக்கைகளை சட்ட விரோதமாகக் கருதியது, கர்நாடக மோட்டார் வாகன விதிகளின் கீழ் வெள்ளை எண் தகடுகள் (தனியார் வாகனங்கள்) கொண்ட இரு சக்கர வாகனங்களை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாது என்று வாதிட்டது.

இது பல நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது, இதில் 2019 பிப்ரவரியில் 200க்கும் மேற்பட்ட பைக்குகளும், 2022 ஜனவரியில் 120 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன, இது வாழ்வாதாரத்தை இழந்ததாகக் கூறி ஆட்டோரிக்ஷா மற்றும் டாக்ஸி தொழிற்சங்கங்களின் போராட்டங்களால் தூண்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ராபிடோ நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மாநில அரசு தனது பைக் டாக்ஸி தொழிலில் தலையிட வேண்டாம் என்றும், இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாகப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் படி பொருத்தமான அனுமதிகளை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடக் கோரியது.

இருப்பினும், ஜூலை 2021 இல், கர்நாடகா எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது, நிலையான போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக பைக் டாக்ஸிகளை சட்டப்பூர்வமாக்கியது, ஆனால் அவற்றை மின்சார வாகனங்களுக்கு (EVகள்) மட்டுமே கட்டுப்படுத்தியது. இதற்கிடையில், ஆகஸ்ட் 2021 இல், வழக்கு நிலுவையில் இருக்கும்போது ரேபிடோவின் பைக் டாக்ஸிகள் மீது அதிகாரிகள் எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.

இதனால்,  ஆட்டோரிக்ஷா தொழிற்சங்கங்கள் பைக் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து,  சில இடங்களில் வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுத்தது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் கடந்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதம்  கர்நாடக உயர் நீதிமன்றம்,  பைக் டாக்ஸி இயக்குபவர்களை ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்களின் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கவும், 2021 இடைக்கால பாதுகாப்பின் கீழ் இயக்க உரிமையை வலுப்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட்டது.

இருப்பினும், தவறான பயன்பாடு (EV அல்லாத பைக்குகள் பயன்படுத்தப்பட்டன) மற்றும் பாதுகாப்பு கவலைகள், குறிப்பாக பெண்களுக்கு, காரணம் காட்டி, மார்ச் 2024 இல் மாநிலஅரசு மின்சார பைக் டாக்ஸி திட்டத்தை வாபஸ் பெற்றது, இருப்பினும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் அதன் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று Rapido கூறியது.

நவம்பர் 12, 2024 அன்று, இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாகப் பதிவுசெய்து மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அனுமதி வழங்க வேண்டும் என்ற Rapidoவின் மனு மீதான தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 6 வாரங்கள் பைக் டாக்சி சேவையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அதற்குள் கர்நாடக மாநில அரசு, இதுதொடர்பான வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.