பெங்களூரு: நித்யானந்தா எங்குள்ளார் என்று வரும் 12ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் புகார், கொலை மிரட்டல் என சர்ச்சைகளில் சிக்கியிருப்பவர் சாமியார் நித்தியானந்தா. தலைமறைவாக இருந்து யு டியூபில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
ஆசிரமத்தில் பாலியல வன்கொடுமை செய்ததாக நித்யானந்தா மீது ஆர்த்தி ராவ் அளித்த புகாரின் பேரில் கர்நாடக சிஐடி விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு சாட்சிகள் விசாரணை தொடங்கி இருக்கிறது.
இந் நிலையில் லெனின் கருப்பன் என்பவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். நித்யானந்தாவுக்கு எதிராக தாம் தொடர்ந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்.
நித்யானந்தாவை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் வரும் 12ம் தேதிக்குள் அவர் எங்கியிருக்கிறார் என்று போலிசார் கூற வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.