பெங்களூரு: இந்து அல்லாதவர்கள், எச்ஆர்ஐசிஇ எனப்படும் கர்நாடகா இந்து மத நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் வரும் பணிகளில், பணிசெய்ய தடைவிதிக்க வேண்டுமென்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது அம்மாநில உயர்நீதிமன்றம்.
மாநிலத்தை, 100 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டுசெல்லும் எந்தவொரு மனுவையும் தாங்கள் ஏற்பதில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
“இந்துமதம் என்பது எப்போது குறுகிய ஒன்றாக இருந்ததில்லை. அதேசமயம், இந்து மதம் ஒருபோதும் குறுகிய எண்ணம் கொண்டவர்களைக் கொண்டிருக்கவில்லை.
நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, இதுபோன்ற மனுக்களை நாங்கள் ஏற்பதில்லை. அரசியலமைப்பு என்று சில அம்சங்கள் அறியப்படுகின்றன மற்றும் அரசியலமைப்பு தத்துவம் என்றும் சில அம்சங்கள் அறியப்படுகின்றன.
நம்மை 100 ஆண்டுகள் பின்னோக்கி இட்டுச் செல்லும் எந்தவொரு விஷயத்தையும் நாம் ஏற்பதில்லை” என்று தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளது தலைமை நீதிபதி அபாய் எஸ் ஒகா அடங்கிய அமர்வு.