பெங்களூரு

ர்நாடகா உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

 

 

தமிழக முதல்-அமைச்சராக வராக கடந்த 1991-96-ம் ஆண்டில் இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்திய சோதனையில் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரத்தின கற்கள், கைக்கடிகாரங்கள் உட்பட ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு சிறப்பு கோர்ட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையு, ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது. வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நடந்தபோது, ஜெயலலிதா காலமானார்.

ஜெயலலிதா வழக்கு கர்நாடகாவில் நடந்ததால், அவர் பயன்படுத்திய 27 கிலோ எடையுள்ள 468 வகையான தங்கம் மற்றும் வைர நகைகள், வெள்ளி பொருட்கள், நகைகள் உட்பட கைப்பற்றப்பட்ட பொருட்கள் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் உள்ளன. இந்த உடைமைகளை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை அரசின் கருவூலத்தில் சேர்க்கக்கோரி, கர்நாடகா உயர்நீதிமன்றத்துஇல் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இன்று லர்நாடக உயர்நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூரு நீதிமன்ற கருவூலத்தில் இருக்கும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைக்க த உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில்,

“27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள், 1,562 ஏக்கர் நிலப் பத்திரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். நகைகளை எடுத்துச் செல்ல தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் 6 பெட்டிகளுடன் வர வேண்டும். உரிய வாகன வசதி, பாதுகாப்புடன் வந்து அனைத்து நகைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்து செல்ல வேண்டும்.

பொருட்கள் எடுத்துச் செல்லும் போது அதனை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த நடைமுறையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த அனைத்து நகைகளையும் பிப்ரவரி 14, 15ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.