நான்காம் தேதி சரக்கு கடைகள்… கர்நாடக அரசு ஆயத்தம்..
’’இனி பொறுப்பதில்லை’’ என்ற முடிவுக்கு வந்து விட்டது, கர்நாடக மாநில பா.ஜ.க.அரசு.
ஊரடங்கு காரணமாக அந்த மாநிலத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் மூடிக்கிடக்கின்றன.
ஊரடங்கு முடிந்த பின் வரும் திங்கள் கிழமைக்கு பிறகே கடைகளைத் திறக்க முடியும் என்ற சூழல்.
(அதுவும் உறுதி இல்லை)
சரக்கு கடைகள் மூடப்பட்டுள்ளதால், கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு, சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்.
எனவே வரும் 4 ஆம் தேதி சரக்கு கடைகளை மீண்டும் திறப்பதற்கான ஆயத்த பணிகளை அந்த மாநில அரசு ஆரம்பித்துவிட்டது.
’’பெரும் பொருளாதார நெருக்கடியில் நாங்கள் சிக்கி இருக்கிறோம். எனவே ஊரடங்கு முடிந்த பின், பச்சை மண்டலங்களில் மட்டுமாவது மதுக்கடைகளைத் திறக்க அனுமதி வேண்டும்’’ எனப் பிரதமர் மோடியிடம், கர்நாடக முதல்-அமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
அனுமதி கிடைத்து விடும் என்றே தெரிகிறது.
‘’ அனுமதி பெற்றதும் முதல் கட்டமாக 4 ஆம் தேதி சில மதுக்கடைகளைத் திறக்க முயற்சி மேற்கொள்ளப்படும், பின்னர் மே மாதம் 15 ஆம் தேதி முதல் அனைத்து கடைகளையும் திறப்போம்’’ என்கிறார், கர்நாடக கலால் துறை அமைச்சர் எச்.நாகேஷ்.
– ஏழுமலை வெங்கடேசன்