சென்னை: கர்நாடக மாநில அரசு, எத்தனை குழு அமைத்தாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த முதலமைச்சர் சித்தராமையா, காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் பணி உரிய அனுமதிக்கு பிறகு தொடங்கப்படும் என்றும், ஏற்கனவே 3 குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடக்கின்றன, மேலும் 2 குழுக்கள் அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், அணை கட்டப்படும் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்றும், அணை கட்டினால் மூழ்கும் பகுதிகள், வெட்டப்படும் மரங்களின் கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடப்பதாகவும் கர்நாடகா அரசு தனது பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
இது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவுக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் செயல்படுவதாக கூறி, தஞ்சாவூரில் அவரது உருவபொம்மை எரித்து போராட்டம் நடைபெற்றது. மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானவை எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ர்நாடகாவால் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் , மேகதாது அணை கட்ட வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் அனுமதி வேண்டும், அனுமதி பெறாமல் கட்ட முடியாது என்றும்எத்தனை குழு அமைத்தாலும் அணை கட்ட முடியாது எஉச்சநீதிமன்றம் சொல்லாத மேகதாதுவை பற்றி பேச காவிரி ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் பாதிக்கப்படும் எனக் கூறி தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை பொருட்படுத்தாத கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வர, தமிழக அரசும் அதை எதிர்த்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.