பெங்களுரூ:
பாரதிய ஜனதா தலைமையிலான கர்நாடக அரசு, பெங்களூர் அருகே 120 அடி விவேகானந்தர் சிலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக வீட்டு வசதி துறை அமைச்சர் வி சோமன்னா, இந்த சிலை அமைக்கும் முடிவை பரிந்துரை செய்துள்ளது. இந்த சிலை பெங்களுரூவில் இருந்து 10 நிமிடங்கள் கடந்து செல்லும் தொலைவில் உள்ள பன்னரகட்டா தேசிய பூங்கா அருகே முதயலா மதுவு நீர்வீழ்ச்சிக்கு அருகே அமைய உள்ளது.  இதுகுறித்து பேசிய அமைச்சர், 597 அடி உயரம் கொண்டதாகவும், குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை போலவே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடாகாவில் விவேகனந்தர் சிலை அமைக்க உள்ளது குறித்த அறிவிப்பு வெளியானது, அதை எதிர்கட்சிகள் விமர்சிக்க தொடங்கி விட்டன. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பேசுகையில், தற்போது அரசு கொரோனா பாதிப்பு தொடர்பான விஷ்யங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், பாரதிய ஜனதா அரசு, கொரோனா பாதிப்பை தடுப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தற்போது, சிலையை நிறுவுவதில் கவனம் செலுத்த வேண்டியதில்லை. இதுமட்டுமின்றி கர்நாடகாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் பிரச்சினை, தொழிலாளர்கள் பிரச்சினை, விவசாயிகள் மற்றும் அனைத்து துறையில் உள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இன்று வரை கர்நாடக முதலமைச்சர் வங்கியாளர்கள், விவசாயிகளை அழைத்து பேசவில்லை. ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விவேகானந்த சிலை கர்நாடக வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு வரும் 1900 ஏக்கர் பிரதமரின் டவுன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட உள்ளது. இதில், அரசாங்கம் ஏற்கனவே 780 ஏக்கர்களை தயாராக வைத்துள்ளது.

இருப்பினும், இந்த சிலையை பன்னெர்கட்டா தேசிய பூங்காவிற்கு மிக அருகில் வைக்க நடவடிக்கை எடுப்பதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் லியோ சல்தானாவை மேற்கோள் காட்டி இந்து, பன்னேர்கட்டா தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள பகுதியை அதிக அடர்த்தி கொண்ட சுற்றுலா மண்டலமாக’ அபிவிருத்தி செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை விமர்சித்த டி.கே.சிவகுமார், ராமநகரத்தில் உள்ள ஹரோபெலே கிராமத்தில் இயேசு கிறிஸ்துவின் 114 அடி சிலையை நிறுவும் திட்டத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக ஆட்சிக்கு வந்து சிலைக்கான நிலம் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை தொடங்கிய பின்னர் இந்த திட்டம் சர்ச்சையில் சிக்கியது.