பெங்களூரு

ர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாஜக மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான பி.எஸ் .எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதி  பத்மாவதியின் மகள்  சவுந்தர்யா ( வயது 30)  ஒரு பயிற்சி மருத்துவர் ஆவார்.  சவுந்தர்யாவின் கணவர் மீரஜும் டாக்டராவார்.   இருவரும் பெங்களூருவில் உள்ள வசந்த்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இன்று காலை சவுந்தர்யாவின் வீட்டுக்கு வேலை செய்யும் பணி பெண் சென்றுள்ளார்.   அவர் கதவைத் திறக்க கூறி வெகுநேரம் தட்டியும் கதவு திறக்கவில்லை.

சந்தேகம் அடைந்த பணி பெண் சவுந்தர்யாவின் கணவர் மீரஜுக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு விரைந்த வந்த மீரஜ் சந்தேகம் அடைந்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். அங்கு காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர்.  அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சவுந்தர்யா மின் விசிறியில் தூக்குப் போட்டுக்கொண்ட நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார்.   காவல்துறையினர் சவுந்தர்யாவின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக பவுரிங் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா தியானேந்திரா இது குறித்து, ” இந்த மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. சவுந்தர்யா கர்ப்பத்திற்குப் பிறகு மன அழுத்தத்துடன் போராடிக்கொண்டிருந்தார் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்.  எடியூரப்பா அவர் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்வதற்காக எடியூரப்பா அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்து வருவார். பேத்தி மரணத்தால்  எடியூரப்பா மிகவும் வருத்தமடைந்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.