பெங்களூரு: கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம் 20கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும், மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், குடும்பத்தலைவி களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023 தொடர்பான அறிவிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் – மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அங்கு,. ஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று கட்சிகளும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
கர்நாடக மாநிலத்தில், 1990க்கு பின்னர் எந்த ஒரு கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறாத நிலையே தொடர்ந்து. இதனால் கூட்டணி ஆட்சியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை பாஜக மாற்றி எழுதும் வண்ணம் தீவிரம் காட்டி வருகிறது. பலகட்ட ஆலோசனை கூட்டங்கள் நடத்தி நிர்வாகிகளை களத்தில் இறக்கி விட்டுள்ளது. கடந்த தேர்தலில் செல்வாக்கு சரிந்திருந்த இடங்களில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வியூகம் வகுத்துள்ளது.
பாஜகவின் திட்டத்தை முறியடித்து, மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மாநிலம் தழுவிய அளவில் வாக்கு வங்கி உள்ளது இருந்தாலும் மக்கள் செல்வாக்கை முழுமையாக கவரும் வகையில், மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி, மாநில பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ரேசனில் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் பெங்களூருவில் அறிவித்துள்ளார். அதாவது, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண் குடும்பத் தலைவிக்கும் மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறினார்.
பொதுவாக நாடு முழுவதும், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கு மத்தியஆருச, ஒரு நபருக்கு 5 கிலோகிராம் உணவு தானியங்களை ஒரு கிலோவுக்கு ரூ.2-3 என்ற விலையில் வழங்குகிறது. NFSA இன் கீழ் ஏழைகளுக்கு ஒரு கிலோ அரிசி ரூ. 3க்கும், கோதுமை கிலோ ஒன்றுக்கு ரூ.2க்கும் வழங்கப்படுகிறது. அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.