பெங்களுரு:
கர்நாடகாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும்.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. தொகுதிக்கு தொடர்பு இல்லாத வெளிமாநில நபர்கள் அங்கிருந்து வெளியேறும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு சேகரிப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.