கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
2018 சட்டமன்ற தேர்தலில் 104 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தற்போது 71 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
பொம்மை அரசின் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை எதிர்த்து மாநில தலைவர் டி.கே. சிவகுமார் தலைமையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி இதுவரை 120 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.
பாஜக சார்பில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல நட்சத்திர பேச்சாளர்கள் கர்நாடகாவில் நிரந்தரமாக தங்கி பிரச்சாரம் செய்த நிலையிலும் அவர்களின் யுக்தி கர்நாடக வாக்காளர்களிடம் இம்முறை எடுபடவில்லை என்பதையே தற்போதுள்ள நிலவரம் உணர்த்துவதாக உள்ளது.
இந்த தேர்தல் முடிவு பாஜக-வையும் பிரதமர் மோடியையும் மக்கள் நிராகரித்திருப்பதன் அறிகுறியாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த முடிவு 2024 பொதுத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றும் பாஜக படுதோல்வி அடையும் என்றும் தெரிவித்துள்ளனர்.