பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்நிலையில், அங்கு அதிமுக போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து  நோட்டா வாக்குகளை விட குறைந்த வாக்குகள் பெற்று அசிங்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 12ந்தேதி  நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் 3 தொகுதிகளில் வேட்பாளர் நிறுத்தப்பட்டனர்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான கோலார் தங்க வயல் பகுதிக்கு அன்பு என்பவரும், காந்தி நகர் தொகுதிக்கு எம்.பி. யுவராஜும், ஹானுர் தொகுதிக்கு ஆர்.பி.விஷ்ணுகுமார் ஆகியோர் நிறுத்தப்பட்டனர்.

ஆனால்,  காவிரி பிரச்சினை காரணமாக அதிமுக வேட்பாளர்களுக்கு  ஆதரவாக அதிமுக முக்கிய  நிர்வாகிகள் யாரும் பிரசாரத்திற்கு செல்லவில்லை.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவில் அதிமுக நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று அசிங்கப்பட்டு உள்ளது.

கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட்ட அன்பு 1024 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். ஆனால், அந்த தொகுதியில் நோட்டா எனப்படும் யாரும் வாக்களிக்க விரும்பாதவர்களின் வாக்கு 1750 பதிவாகி உள்ளது.

அதுபோல காந்திநகர் தொகுதியில், நோட்டாவுக்கு 2017 வாக்குகள் பதிவான நிலையில், அதிமுக வேட்பாளர் அன்பு 1024 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

மற்றொரு தொகுதியான ஹானுர் தொகுதியில் நோட்டாவுக்கு 1373 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் யுவராஜுக்கு வெறும் 545 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

அதிமுக போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்ததுடன் டெபாசிட்டையும் பறிகொடுத்துள்ளது. அதமட்டுமல்லாமல் நோட்டாவை விட குறைந்த வாங்குகள் பெற்று,  தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக அசிங்கப்பட்டு உள்ளது.

அதிமுகவின் இந்த படுதோல்வி சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இபிஎஸ், ஓபிஎஸ்-ன் சாதனை என்றும் விமர்சிக்கப்படுகிறது.