பெங்களூரு
காவிரியில் போதிய நீர் இல்லாததால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் அளிக்க முடியாது என கர்நாடக அமைச்சர் கூறி உள்ளார்.
தற்போது தமிழகத்தில் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. உச்சநிதிமன்ற தீர்ப்பின் படி அளிக்க வேண்டிய தண்ணீரை கர்னாடகா திறந்து விடாமல் உள்ளது. இது குறித்து கர்நாடகா முதல்வருடன் நேரில் சந்தித்து பேசப் போவதாக தமிழக முதல்வர் அறிவித்தார். அதையொட்டி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் கர்னாடகா மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம். பி. பாட்டீல் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர், “கர்நாடகாவில் தற்போது போதிய நீர் இல்லை. காவேரி ஆறு வரண்டு காணப்படுகிறது. கர்நாடகா மாநிலத்துக்கே போதுமான அளவு நீர் இல்லாததால் தமிழகத்துக்கு தன்ணீர் திறக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.