பெங்களூரு:

த்திய மாநில பாஜக அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரிகள் கொதித்தெழுந்து வரும் நிலையில், தற்போது கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறிய கேரளாவைச் சேர்ந்த  ஐஏஎஸ் அதிகாரி கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்தின் தட்சின கன்னடா பகுதியில் துணைஆணையளராக பதவி வகித்து வந்த எஸ்.சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் (S Sasikanth Senthil) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது ராஜினாமா குறித்து  கூறிய சசிகாந்த், “ஜனநாயகத்தின் அடிப்படை கட்டுமானமே ஆட்டங்கண்டுள்ள நிலையில், எப்போதுமில்லாதவாறு சமரசம் செய்யப்படுகின்றது. இந்த நிலையில் நான், அரசு ஊழியராக தொடர்வது நியாயமற்றது என்று கருதுவதால் இந்த முடிவை எடுத்துள்ளேன்”  என்று தெரிவித்து உள்ளார்.

காஷ்மீர் பிரச்சினை குறித்தே அவர் ஜனநாயகத்தின் அடித்தளமே பாஜக ஆட்சியாளர்களால் ஆட்டங்கண்டுள்ளது என்பதை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி எழுதியுள்ள கடிதத்தின் நகல்…