பெங்களூரு

வெளி மாநிலத தொழிலாளர் சொந்த மாநிலத்துக்குத் திரும்ப போக்குவரத்து கட்டணமாக கர்நாடக அரசுக்குக் கர்நாடக காங்கிரஸ் ரூ. 1 கோடி அளித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணி புரியும் மாநிலங்களில் இருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால் பல மாநிலங்களிலும் வெளி மாநில தொழிலாளர்கள் சிக்கி உணவின்றி வாடும் நிலை ஏற்பட்டது.  இந்நிலையில் மத்திய அரசு வெளி மாநில தொழிலாளர்களை அந்தந்த மாநில அரசு ஒப்புதலுடன் திருப்பி அனுப்பலாம் என அறிவித்தது.

இதற்கு  வெளி மாநில தொழிலாளர்களிடம் போக்குவரத்து கட்டணங்க்ள் அளிக்க வேண்டுமென அந்தந்த  மாநிலஙக்ள் அறிவித்துள்ளன.   அவ்வகையில் கர்நாடக மாநில பாஜக அரசு வெளி மாநில தொழிலாளர்களுக்குக் கர்நாடக அரசு பேருந்து கழகம் மூலம் சிறப்புப் பேருந்து ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு வெளி மாநில  தொழிலாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்தது.

இதையொட்டி கர்நாடக மாநில காங்கிரஸ் ரூ. 1 கோடிக்கான காசோலையை கர்நாடக அரசு போக்குரத்துக் கழகத்துக்கு அளித்துள்ளது.   இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார், “கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குக் கர்நாடக மாநில  காங்கிரஸ் ரூ. 1 கோடிக்கான காசோலை அளித்துள்ளது.

இது வெளி மாநிலத்தில் இருந்து வந்து சொந்த ஊர் செல்ல கஷ்டப்படும் ஏழைத் தொழிலாளர்களிடம் கர்நாடக அரசு கேட்ட போக்குவரத்து கட்டணங்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது.  இதற்கு மேலும் பணம் தேவை என்றால் அரசு எங்களுக்குத் தெரிவித்தால் நாங்கள் அதையும் அளிக்கத் தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.