திருச்சூர்: கேரள மாநிலத்தின் திருச்சூரில் உள்ள வடக்குநாத சாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழா, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தாண்டு ரத்துசெய்யப்பட்டது.
இந்தக் கோயிலின் பூரம்தான், கேரளாவின் அனைத்துப் பூரங்களுக்கும் தாயாக கருதப்படுகிறது. இந்த விழாவில் யானைகளின் அணிவகுப்பும், சண்டை மேள இசையும் வெகு பிரசித்தம். இதில், லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வர்.
ஆனால், இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக அந்த விழா ரத்துசெய்யப்பட்டுள்ளது. இந்த விழா தொடங்கியதிலிருந்து, ரத்து செய்யப்படுவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பூரம் திருவிழாவின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும், தற்போது கொரோனா மற்றும் திருவிழா ரத்து உள்ளிட்டக் காரணங்களால் வெறிச்சோடி காணப்படும் கோயிலின் ஒரு புகைப்படமும் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தப் படங்கள் இங்கே பத்திரிகை.காம் வாசகர்களாகிய உங்களின் பார்வைக்கும்…