பெங்களூரு:
கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுள்ள குமாரசாமி இன்று பிரதமர் மோடியை டில்லியில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் 104 இடங்களை மட்டுமே பிடித்த பாஜக ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டதும், முதல்வராக குமாரசாமி பதவி ஏற்று, நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்ததும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதைத்தொடர்ந்து கர்நாடக முதல்வராக குமாரசாமி காங்கிரஸ் ஆதரவுடன் பதவி ஏற்றார். ஆனால், பதவி ஏற்று ஒரு வாரம் ஆகி உள்ள நிலையில், இன்னும் அமைச்சரவை உருவாக்கப்படவில்லை. அமைச்சர்கள் பதவி யாருக்கு, யார் யாருக்கு எந்த துறை என்பது குறித்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் நிர்வாகிகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படாததால் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், இன்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.