பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 47 வயதான தொழிலதிபர் காருக்குள் தன்னைத் தானே தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது சாவுக்கு காரணம் பாஜக எம்எல்ஏ லிம்பாவலி மற்றும் அவரது நண்பர்கள் என்று கடிதம் எழுதி உள்ளார். புத்தாண்டு அன்று நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 47வயருது இளம் தொழிலதிபர் ஒருவர் பாஜக எம்எல்ஏவின் தொல்லை மற்றும் மிர்ட்டல் காரணமாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொழிலதிபர் ஒயிட்ஃபீல்டு குடியிருப்பாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் காருக்குள் தன்னைத்தானே தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றிய நிலையில், அவரது காருக்குள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 8 பக்க கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், தனது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விரிவாகி எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி உட்பட 6 பேர் தான் தனது தற்கொலை நடவடிக்கைக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியைம் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி. தொழிலதிபர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்றோ அல்லது அவர் ஏன் அந்த குறிப்பில் எனது பெயரை எழுதியிருந்தார் என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
முன்னதாக அவர் ரிசார்டில், புத்தாண்டை கொண்டாடிவிட்டு, நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) காலை, அவர் சிராவுக்குச் செல்ல வேண்டும் என்று கூறி ரிசார்ட்டை விட்டு வெளியேறியதாகவும், ஆனால் அவர் அதற்கு பதிலாக வீட்டிற்குச் சென்று, இறப்புக் குறிப்பை எழுதி வைத்துவிட்டு ரிசார்ட்டுக்குத் திரும்பினார். மாலையில், வீடு திரும்பும் போது, ஓடும் காரில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பின்படி, எச்எஸ்ஆர் லேஅவுட் அருகே வரவிருக்கும் ரிசார்ட் திட்டத்தில் பிரதீப் சுமார் ரூ. 1.5 கோடி முதலீடு செய்திருந்தார், மேலும் பங்கு தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. அவர் தனது வீட்டை விற்று கடன் வாங்கி பணம் திரட்டினார், இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக,. குறிப்பிட்ட ஐந்து தொழிலதிபர்கள் சார்பாக லிம்பாவலி சமரசம் செய்ய முயன்றார் என்றும், அதில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அவர் தற்கொலை கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர், தனது ரிசார்ட் திட்டத்திற்கான நிலவைதொகையை ஒரு மாதத்திற்கு முன்பே செலுத்த ஒப்பந்தம் செய்திருந்ததாகவும், ஆனால் அவர் முழு பணத்தையும் பெறவில்லை. இதனால் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் மனஉளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.