பெங்களூரு

நேற்று நடந்த கர்நாடக நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத  பகுஜன் சமாஜ் சட்டப்பேரவை உறுப்பினர் மகேஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து 16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் விலகினர். இதனால் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் அரசுக்கு எதிராக 105 வாக்குகளும் கிடைத்ததால் அரசு கவிழ்ந்தது.

கர்நாடக சட்டப்பேரவையில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் மகேஷ் உள்ளார். இந்த வாக்கெடுப்பில் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க அவருக்கு கட்சி உத்தரவிட்டிருந்தது.  ஆனால் மகேஷ் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

இதை ஒட்டி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி மகேஷை கட்சியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.