பெங்களூரு: கர்நாடக பாஜக எம்.பி. ஸ்ரீநிவாசா பிரசாத்துக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா வீட்டில் தனிமைப்படுத்து தலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்ற பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஆகஸ்டு முதல்வாரத்தில்,  ர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து,  முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஆறு ஊழியர் களுக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து எடியூரப்பாக குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று சோதனை நடத்தப்பட்டது. அதில்,  எடியூரப்பாவின் மகள் பத்மாவதிக்கும் தொற்று பாதிப்பு உறுதியானது. ஆனால், அவரது மகன் விஜயேந்திராவுக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. தொற்று பாதிப்பு குணமடைந்துஎடியூரப்பாக கடந்த வாரம் வீடு திரும்பினார்.

இந்த நிலையில், தற்போது  எடியூரப்பா மகன் விஜயேந்திரா வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். இவர் சமீபத்தில் கர்நாடக பாஜக எம்.பி.  ஸ்ரீநிவாசா பிரசாத்தை சந்தித்து பேசினார். தற்போது எம்.பி.க்கு தொற்று உறுதியானதால், விஜயேந்திரா ஹோம் குவாரனடைனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.