கர்நாடகாவில் ஆட்டம் காணும்  பா.ஜ.க. அரசு..

கர்நாடக மாநிலத்தில் விரைவில் ராஜ்யசபா மற்றும் சட்டமேலவை தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அங்குள்ள பா.ஜ.க. வினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

வேட்பாளர் தேர்வில் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் தலையீடு பிடிக்காத பா.ஜ.க.மூத்த எம்.எல்.ஏ.க்கள் அண்மையில் ரகசிய கூட்டங்கள்  நடத்தியுள்ளனர்.

இதனால் எடியூரப்பா கலக்கம் அடைந்துள்ள நிலையில், முன்னாள் முதல் –அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமய்யா, வெளியிட்ட ஒரு கருத்து எடியூரப்பாவின் தூக்கத்தைத் தொலைத்துள்ளது.

‘ பா.ஜ.க.வில் அதிருப்தியில் உள்ள சில எம்.எல்.ஏ.க்கள் அண்மையில் என்னைச் சந்தித்தனர். முதல்வர் எடியூரப்பாவின் செயல்பாடுகள் குறித்து, அந்த எம்.எல்.ஏ.க்கள் ,தங்கள் அதிருப்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டனர்’’ என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார் அவர்.

‘’உள்கட்சி மோதலால் கர்நாடகாவில் பா.ஜ,.க.அரசு தானாகவே கவிழும் ‘’ என்றும் சித்தராமய்யா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, நிழல் முதல் –அமைச்சராகச் செயல்படுகிறார் என , பா.ஜ.க.வினரே குற்றம் சாட்டும் நிலையில் , சித்தராமய்யாவின் கருத்து, அங்குப் புயலை உருவாக்கியுள்ளது.