பெங்களூரு
கர்நாடக மாநிலத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 25 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
நாடெங்கும் கொரோனா தாக்குதல் காரணமாகப் பல மாநிலங்களில் 10ஆம் வகுப்புத் தேர்வு நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழக அரசு விரைவில் 10 ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவித்தது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் மூலம் தமிழக அரசு மாணவர்களின் உயிருடன் விளையாடுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று கர்நாடக மாநில கல்வி அமைச்சர் சுரேஷ் குமார். “பத்தாம் வகுப்புத் தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி ஜூலை 4 ஆம் தேதி நடைபெறுகிறது. புகுமுக வகுப்புக்கான மீதமுள்ள ஒரே தேர்வான ஆங்கிலத் தேர்வு ஜூன் மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது
மாணவர்கள் தேர்வு அரங்கினுள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர். அனைத்து மாணவர்களும் முகக் கவசம் அவசியம் அணிந்திருக்க வேண்டும். சானிடைசர்கள் எடுத்து வர வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளி வழிகாட்டுதல்கள் தேர்வு அரங்கில் பின்பற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.