பெங்களூரு

முன்னாள் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இன்று காலை 8 மணி முதல் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கர்நாடக மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின் படி தற்போது பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜ.க. 7 தொகுதிகளிலும், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும், வெற்றி பெற்று உள்ளது. மீதமுள்ள் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பா.ஜ.க. தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியில் 7,05,538 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பசவராஜ் பொம்மையை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்தசுவாமி கடதேவர்மத் 6,62,025 வாக்குகள் பெற்றுள்ளார். எனவே இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 43,513 ஆகும்.