
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகி பின்னர் மே 14-ம் தேதி OTT தளமான அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது.
இந்த படத்தில் தனுஷுடன் , ராஜிஷா விஜய், யோகி பாபு, லால், கெளரி, பூ ராம், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில், தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவில் வெளியானது கர்ணன் படம்.
விமர்சனரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாவும் இந்தப்படம் சாதனை படைத்தது. சப் டைட்டில் உதவியுடன் இந்தியாவின் பிற மொழி ரசிகர்களையும் படம் சென்றடைந்தது. இந்திய அளவில் ‘கர்ணன்’ படத்திற்கு பல விமர்சனங்கள் எழுதப்பட்டன.
இந்நிலையில் தற்போது சர்வதேச அளவில் ‘கர்ணன்’ படத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட்டில் நடைபெறும் நியூ ஜெனரேஷன் இன்டிபென்டன்ட் இன்டியன் ஃபிலிம் பெஸ்டிவலில் திரையிட கர்ணன் படம் தேர்வாகியுள்ளது. இந்த செய்தியை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/mari_selvaraj/status/1437683773454258181