டில்லி

ற்போது மூடப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவையை தொடங்க விடப்பட்ட ஏலத்தில் கார்ல்ரோக் கேபிடல் மற்றும் முராரிலால் ஜலன் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

ந்தியாவை சேர்ந்த் தனியார் விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடன் தொல்லையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது.   தினசரி செலவுகளுக்கும் நிதி இல்லாத நிலை ஏற்பட்டதால் கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் சேவையை நிறுத்திக் கொண்டது.  இதையொட்டி இந்த நிறுவனப் பங்குகளை விற்று கடன் தொகையை மீட்டெடுக்க ஸ்டேட் வங்கி தலைமையிலான குழு முயற்சி செய்தது

இந்த நிறுவனத்தை வாங்க முன் வந்தோர் அளிப்பதாகத் தெரிவித்த தொகை கடன் தொகைக்கு ஈடாக இல்லாததால் இந்த வர்த்தகம் முடிவடையாமல் இருந்தது.  தற்போது கார்ல்ரோக் கேபிடல் என்னும் நிதி நிறுவனம் மற்றும் அமீரகத்தில் வசிக்கும் தொழிலதிபர் முராரிலால் ஜலன் ஆகியோரின் கூட்டணி இந்த நிறுவனத்தை வாங்க முற்பட்டது.   இதற்குக் கடன் வழங்கியோர் குழுவைச் சேர்ந்தோர் ஒப்புதல் அளித்துள்ளனர்

இதற்கு குழுவில் உள்ள எத்தனை பேர் ஆதரவு  தெரிவித்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை எனினும் குறைந்தது 66% பேர் ஆதரவு அளித்தால் மட்டுமே இந்த பேரம் முடியும்.  இன்று இந்த ஒப்பந்தப் புள்ளி ஒப்புதலுக்கான ஆன்லைன் வாக்கெடுப்பு முடிவடைந்துள்ளது.  இதில் இந்த கூட்டணிக்கு அதிக அளவில் வாக்கு கிடைத்து விரைவில் ஒரு ஒப்பந்தம் உண்டாக்கப்படும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் அளித்தோரின் இந்த முடிவுக்குக் கூட்டணியில் உள்ள தொழிலதிபர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  கர்லோக் – முராரிலால் கூட்டணி ஸ்டேட் வங்கி தலைமையிலான குழுவுக்கு ரூ.850 கோடி அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது   அத்துடன் இந்த நிறுவன புனரமைப்புக்குக் கூட்டணி சார்பில் ரூ.800  கோடி வழங்க உள்ளது.

ஜெட் ஏர்வேஸ்க்கு தற்போது கடன மட்டும் ரூ.8000 கோடியும் ஊழியர் ஊதிய பாக்கி உள்ளிட்ட அனைத்து நிலுவைத் தொகைகளும் சேர்ந்து ரூ.40000 கோடியும் உள்ளது.