
தன்னை விட வயதில் மூத்தவரான நடிகை அம்ரிதா சிங்கை நடிகர் சைஃப் அலி கான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாரா லிகான் என்ற மகளும், இப்ராஹிம் என்ற மகனும் உள்ளனர். 24 வயதாகும் சாரா அலி கான் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து பாலிவுட் நடிகை கரீனா கபூரை காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது தைமூர் அலி கான் என்ற 3 வயது மகன் இருக்கிறார்.
இந்நிலையில் கரீனா கபூர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி வந்தன.
Patrikai.com official YouTube Channel