டில்லி

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கக் கோரிய மனுவை துணை ஜனாதிபதி நிராகரித்தது குறித்து இரு காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கை கபில் சிபல் திரும்பப் பெற்றார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது புகார்கள் எழுப்பி அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் மனு ஒன்றை அளித்தனர்.  அவர் அந்த மனுவில் பதவி நிக்கம் செய்ய தகுதியான புகார்கள் இல்லை எனக் கூறி மனுவை நிராகரித்து விட்டார்.

இதை எதிர்த்து காங்கிரஸை சேர்ந்த 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர்.   வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மனு மாற்றப்பட்டது.   இதில் உறுப்பினர்கள் சார்பாக வாதிட வந்த கபில் சிபல் இந்த அமர்வு எவ்வாறு உருவானது என்பது குறித்து விளக்கம் கேட்டார்.

இந்த அமர்வில் உள்ள நீதிபதிகள் அவருக்கு பதில் அளிக்க மறுத்து விட்டனர்.  கபில் சிபல் மேலும் வற்புறுத்தியும் பதில் அளிக்காமல் வழக்கை தொடர நீதிபதிகளின் அமர்வு கூறியது.   தமது கேள்விக்கு பதில் கிடைக்காததால்  இந்த வழக்கு மனுவை திரும்பப் பெறுவதாகக் கூறி கபில் சிபல் வழக்கை திரும்ப பெற்றுள்ளார்.

இதை ஒட்டி இந்த வழக்கை அமர்வு ரத்து செய்துள்ளது