மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கமுத்து உட்பட பல காமெடி ஹீரோக்கள் (!) நடிக்கும் படம் “அட்ரா மச்சான் விசிலு”. திரைவண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தபோதே “ரஜினி வேடத்தில் வந்து அவரை கலாய்த்திருக்கிறார் பவர் ஸ்டார்” என்று செய்தி பரவியது.

பவர்ஸ்டாரோ, “ இந்தப் படத்தில், சினிமா ஹீரோ வேடத்தில் நடிக்கிறேன். தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி கதாநாயகனாக இருக்கும் எனக்கு திடீரென ஒரு படம் தோல்வி அடைகிறது. அந்த படத்தின் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் நஷ்ட ஈடு கொடுத்தேனா இல்லையா என்பதுதான் கதை. ரஜினியின் ஹிட் பாடலான வந்தேன்டா பால்காரன் பாடல், வந்தேன்டா பவர்காரன் என மாற்றப்பட்டு இந்த படத்தில் இடம் பெறுகிறது. அவ்வளவுதான். மற்றபடி இந்த படத்தில் ரஜினியை கலாய்க்கவில்லை” என்றார். (அடப்பாவிகளா, அப்படியே ரஜினி விவகாரமாத்தானே இருக்கு!)
பவர்ஸ்டார் அதோடு விடவில்லை… “யார் மனசையும் புண்படுத்தற மாதிரியான காட்சிகள் இந்தப்படத்தில் கிடையாது. குறிப்பாக ரஜினியை அவமதிக்கிறது மாதிரியான காட்சிகள் கிடையாது. அப்படி இருக்கக்கூடாதுனு கண்டிசன் போட்டுத்தான் இந்தப்படத்துல நடிக்கவே ஒப்புக்கிட்டேன்” என்று பஞ்ச் வைத்தார்.
இதெல்லாம் பழைய கதை.
லேட்டஸ்ட் மேட்டர் என்னவென்றால்…
“நான் பார்க்கத்தான் காமெடி.. பத்தவச்சா சரவெடி” , “நீ யாரா இரு.. எவனா இரு.. என்கிட்ட ஒழுங்கா இரு..” , “சாமியை கோவில்ல சந்திப்பேன்.. எதிரியை கோட்டையில சந்திப்பேன்டா..” என்றெல்லாம் ரஜினி மாதிரியே பஞ்ச் டயலாக் அடித்திருக்கிறாராம் பவர்.
அதுமட்டுமல்ல..
“ரஜினியோட “கபாலி” ஜூலை இரண்டாவது வாரம் ரிலீஸ்னு பேசிக்கிறாங்க. அதுக்கு போட்டியாத்தான் முதல் வாரம் என் என்னோட இந்த “விசிலு” படம் ரிலீஸ் ஆகுது. அதாவது “கபாலி”க்கு முன்னாடி ரிலீஸ் ஆகி, அதுக்கு அப்புறமும் என் படம் ஓடணும்.. ஓடும்!” என்று கான்பிடன்டாக சொல்லிவருகிறாராரம் பவர்!

ஏற்கெனெவே, “இன்னைக்கு பவர் ஸ்டாரா இருக்கிற நான், நாளைக்கு சூப்பர் ஸ்டார் ஆவேன். எனக்கு போட்டி ரஜினிதான்..” என்று ஓப்பன் ஸ்டேட் மெண்ட் கொடுத்தவர்தான் பவர் என்பது மிக குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை நிசமாலுமே ரஜினிக்கு போட்டியா வந்துடுவாரோ பவர்?
Patrikai.com official YouTube Channel