பெங்களூரு:
ர்நாடகத்தில் ரஜினியின் கபாலி படம் திரையிட்டதற்கு எதிர்ப்பு  தெரிவித்து  அவரது பட போஸ்டர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

பெங்களூரில் ரஜினி கபாலி பட போஸ்டர் எரிப்பு
பெங்களூரில் ரஜினி கபாலி பட போஸ்டர் எரிப்பு

கர்நாடக சாலுவாலி இனத் தலைவரும், கன்னட கூட்டமைப்பு தலைவருமான வாட்டாள் நாகராஜ் பெங்களுருவில் ரஜினியின் கபாலி படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன் கபாலி பட போஸ்டரை தனது ஆதரவாளர்களுடன்  சென்று  தீ  வைத்து கொளுத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
அப்போது அவர் பேசியது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் விதிமுறைகள் மீறி கர்நாடகாவில் 300  திரையரங்குகளில் கபாலி திரைப்படம் திரையிட்டுள்ளது கண்டனத்துக்குறியது.
கர்நாடக மாநிலத்தில், பிற மொழி திரைப்படங்கள் திரைக்கு  வந்து 4 வாரங்கள் கழித்து தான் திரையிட வேண்டும் என்று கர்நாடக வர்த்தக சபையில் விதிமுறை  வகுக்கப்பட்டுள்ளது.  அது மீறப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சல்மான்கான்  நடித்த சுல்தான் திரைப்படம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பல  திரையரங்களில் திரையிடப்பட்டதால், கன்னட திரைப்படங்கள் திரையிட முடியாமல்  தயாரிப்பாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
தற்போது கபாலி  திரையிடப்பட்டுள்ளதின் மூலம் அதே நிலை கன்னட திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு  ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் கழிவறை சுவர் தவிர, பிற கட்டிடங்களில் கபாலி  சுவர் விளம்பரம் உள்ளது. இதை இப்படியே விட்டால் கழிவறையை கூட திரையரங்கமாக  மாற்றிவிடுவார்கள் என்று ஆவேசத்துடன் கூறினார்.
இதனால் அந்த பகுதி பரபரப்பு அடைந்தது.