தமிழகத்தின் பங்கு முக்கியமானது: வெங்கையா நாயுடு

Must read

சென்னை:
ன்று நடைபெற்ற மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குத்துவிளக்கு ஏற்றி  மெட்ரோ ரயில் சிறப்பு மலரையும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். முதல் பிரதியை தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத் பெற்றுக் கொண்டார்.

மலர் வெளியிட்டபோது
விழா மலர் வெளியிட்டபோது

விழாவில் பேசிய வெங்கையா நாயுடு:   பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் விரிவாக்க பணி மேற்கொள்வதால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மெட்ரோ ரயில்  திட்ட விரிவாக்கத்திற்காக இதுவரை மத்திய அரசு 10 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த விரிவாக்கத் திட்டம் வட சென்னையில் வசிக்கும் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் என்றும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது. இந்தியப் பொருளாதாரத்தில் தமிழகம் மிக முக்கிய இடத்தில் இருக்கிறது என்றார்.

More articles

Latest article