கன்னியாகுமரி:
இந்திய வின்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிவனின் இந்த சாதனையை அந்த மாவட்ட மக்களும், சொந்த ஊர் மக்களும் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சாமி தான் படித்த அரசு தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு அவர் தலைமை ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள் ஆகியோரை சந்தித்து உரையாடினார். இது பார்த்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.
கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல் விளை தொடக்கப் பள்ளியை அவர் பார்வையிட்டு திரும்பிய புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel