ன்னியாகுமரி

ன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் எச் வசந்தகுமார் வெற்றி பெற்றுள்ளார்.

மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.  கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பொன், ராதாகிருஷ்ணனை தோற்கடித்தார். இந்த தேர்தலில் வசந்தகுமார் 6,27,235 வாக்குகளும் பொன் ராதாகிருஷ்ணன் 3,87,202 வாக்குகளும் பெற்றனர்.

வசந்தகுமார் ஏற்கனவே நான்குநேரி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் நேற்று செய்தியாளர்களிடம்,”என்னை காங்கிரஸ் சார்பில் குமரி மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த தலைமைக்கும் ஒத்துழைபு அளித்த கூட்டணிக் கட்சிகளுக்கும் நன்றி. மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளிக்க மக்களிடம் விடுத்த கோரிக்கையை ஒட்டி அவர்கள் வாய்ப்பளித்துள்ளனர்.

எனவே வருங்காலத்தில் மக்களுக்காக பணி ஆற்றுவதே எனது முதல் கடமை ஆகும். ஓராண்டு காலத்துக்கு பிறகு நான் என்ன பணி புரிந்துள்ளேன் என்பதை தெரிவிக்கிறேன். தற்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாத போதிலும் குமரி மக்களுக்காக நான் எந்த ஒரு மத்திய அமைச்சரிடமும் முறையிடுவேன். மத்திய அரசின் நலத் திட்டங்கள் குமரி மக்களுக்கு கிடைக்கவும், மக்கள் ஒப்புக் கொள்ளாத எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க கூடாது எனவும் நான் போரிடுவேன்” என தெரிவித்துள்ளார்.