கிருத்திகா புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் சுந்தர் பாலு எழுதி இயக்கும் கன்னித்தீவு திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா தத்தா , ஆஷ்னா ஜாவேரி, சுபிக்ஷா மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்ய ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று கன்னித்தீவு படத்தின் டீசர் வெளியானது. வரலட்சுமி சரத்குமார் ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்ஷா என நான்கு கதாநாயகிகள் அதிரடியில் கலக்கும் கன்னித்தீவு படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.