டில்லி
கேரள மாநில காங்கிரஸ் தலைவராக கண்ணனூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே சுதாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் இன்று கேரள மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை இன்று நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில காங்கிரஸ் தலைவராக கண்ணனூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே சுதாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- கொடிக்குன்னில் சுரேஷ், எம் பி
- பி டி தாமஸ் எம் எல் ஏ
- டி சித்திக் எம் எல் ஏ
மேலும் இதுவரை தலைவராக இருந்த முல்லப்ப்ள்ளி ராமச்சந்திரன் மற்றும் செயல் தலைவராக இருந்த கே வி தாமஸ் ஆகியோரின் சேவையைத் தலைமை பாராட்டி உள்ளது.
தனது நியமனம் குறித்து கே சுதாகரன், “நான் இந்த பதவியை ஏற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் அனைத்து தலைவர்களுடன் நல்லுறவுடன் இருந்து கட்சியை மேம்படுத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.