கொரோனா தொற்று காரணமாக தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் கடந்த வாரத்தில் மரணம் அடைந்தார். இந்நிலையில் கன்னட மூத்த நடிகர் ஹுலிவன கங்காதர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்.
பிரேமா லோகா என்ற தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பில் ஹுலிவன் கங்காதர் பங்கேற்றார். ஹூட்டிங்கில் இருந்த 2வது நாளில் ஹுலியனுக்கு லேசான கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் தெரிய வந்தது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால் மூச்சு விடுவதில் அவருக்கு சிரமம் ஏற்படதால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்று சேர்த்தனர். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை பலனில்லாமல் கொரோனா தொற்றுக்கு பலியானார்.
ஹுலியன நூற்றுக்கும் மேற்பட்ட திரை படங்களில் நடித்திருக்கிறார். உல்டா பால்டா, கிராம தேவதே, பூமி தாயா சோச்சலா மாகா, அப்பு, குரிகலு சர் குரிகலு, மற்றும் சபவேதி போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனார் மேலும். 150 நாடகங்களிலும் நடித்திருக் கிறார். சமீபகாலமாக பல கன்னட சீரியல் களிலும் அவர் நடித்திருந்தார்.
கொரோனா தொற்றுக்கு பலியான நடிகர் ஹுலிவானா கங்காதரருக்கு வயது 70 ஆகிறது. ஹுலிவான கங்கந்தர் மறை வுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித் துள்ளனர்.